என் மலர்
நீங்கள் தேடியது "sathuragiri malai"
- தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பக்தர்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மாலை 4 மணிக்குள் திரும்பி வர வேண்டும், இரவில் தங்கு வதற்கு அனுமதி இல்லை.
கடந்த சில தினங்களாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 17-ந்தேதி முதல் இன்று வரை பக்தர்கள் கோவிலுக்கு மலை ஏறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 18-ந்தேதி ஐப்பசி மாத சனி பிரதோஷம், நேற்று தீபாவளி திருநாள், இன்று ஐப்பசி மாத அமாவாசை திருநாள் வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இன்று சில பக்தர்கள் மட்டும் அனுமதி உண்டா எனக் கேட்டனர். ஆனால் வனத்துறையினர் அனுமதி வழங்காததால் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இன்று அதிகாலையில் இருந்து சதுரகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஓடையிலும் தண்ணீர் கூடுதலாக வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் இன்றி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வோரிடம் அந்த பாட்டில் மீது ‘ஸ்டிக்கர்‘ ஒட்டி ரூ.10 வசூலிக்கப்படுகிறது. மலையில் இருந்து திரும்பியதும் அந்த பாட்டிலை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கம்பு ஊன்றிக்கொண்டு எளிதாக மலையேறுவதற்காக கம்புகள் வாடகைக்கு விடப்படுகின்றன.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சதுரகிரி மலை ஏறுவதற்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் மற்ற நேரங்களில் தாணிப்பாறை வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அழகாபுரி சந்திப்பில் இருந்து தம்பிபட்டி, மகாராஜபுரம், தாணிப்பாறை விலக்கு வழியாக லயன்ஸ் பள்ளி அருகே நிறுத்த வேண்டும்.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் இருந்து சேசபுரம், கோபாலபுரம், வத்திராயிருப்பு, பிள்ளையார்கோவில் சந்திப்பு, சேதுநாராயணபுரம் வழியாக அங்குள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல வேண்டும். மேலும் ராம்நகர், அமச்சியார் அம்மன் கோவில், பிள்ளையார்கோவில், மாவூத்து ஆகிய இடங்களிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
தாணிப்பாறை விலக்கு, சிவசங்கு மடம், ராம்நகர் ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது. வத்திராயிருப்பு-தாணிப்பாறை விலக்கு முதல் தாணிப்பாறை அடிவாரம் வரை சென்றுவர மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஜபுரம் பிள்ளையார்கோவில் விலக்கு முதல்சிவசங்குமடம் வரையிலான வழித்தடமும், கிருஷ்ணன்கோவில் சந்திப்பு- வத்திராயிருப்பு - சேதுநாராயணபுரம் வரையிலான வழித்தடமும் ஒருவழி பாதையாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதோடு வெளிமாவட்டங்களில் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,065 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.
சதுரகிரி மலையில் தகவல்களை பரிமாறிக்கொள்வதில் காவல் துறைக்கும் சிரமம் உள்ளது. எனவே மலைப்பாதையில் தற்காலிகமாக கோபுரம் அமைத்துதரவேண்டும் என்று பி.எஸ்.என்.எல்.க்கு போலீசார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று உடனடியாக கோபுரம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.






