search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sathankullam"

    • சாத்தான்குளத்தில் அகில இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.
    • பா. ஜனதா கட்சியினர் சொந்த முயற்சியில் கட்சி வளர்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகளை உடைத்து அவர்கள் வளர முடியாமல் போவதற்கு வழி செய்கிறது

    சாத்தான்குளம்,ஆக.10-

    சாத்தான்குளத்தில் அகில இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து புறப்பட்ட பாதையாத்திரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாத யாத்திரையில் மாநில, மாவட்ட நகர கிளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

    மெயின் பஜார் வழியாக சென்ற பாதை யாத்திரையில் அனைவரும் கையில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். நிறைவில் புதிய பஸ் நிலைய அருகே பாதயாத்திரை வந்தடைந்தது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேசினார்கள். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பேசும்போது, கள்ளக்குறிச்சி மாணவி சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.

    ராகுல் காந்தி எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இப்பொழுது வழி நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி சொந்தக் காலில் நிற்க வலுவில்லாமல் உள்ளது. பா. ஜனதா கட்சியினர் சொந்த முயற்சியில் கட்சி வளர்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகளை உடைத்து அவர்கள் வளர முடியாமல் போவதற்கு வழி செய்கிறது என்று கூறினார்.

    இந்த பாதயாத்திரையில் சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, நகர தலைவர் வேணுகோபால், பனை நல வாரிய உறுப்பினர் எடிசன், பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சீலன் துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, நாராயணன், கதிர்வேல் உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளான பேர்கள் கலந்து கொண்டனர்.

    ×