search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapparabavani"

    • இன்று 9-வது திருநாளை முன்னிட்டு காலையில் சுவாமி பிக்ஷாடனராக எழுந்தருளி சப்பரபவனி நடந்தது.
    • நிறைவு நாளான நாளை இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடை பெறுகிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோம சுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவி லில் ஆனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.

    8-வது திருநாளான நேற்று காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து நடராஜர் மூர்த்தி வெஞ்சப்பரத்தில் வெண்பட்டு உடுத்தி வெண்மலர்ச்சூடி வெள்ளை சாத்தி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மண்டகப்படிதாரரான தொழிலதிபர் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ்குமார் சார்பில் சஜன் கலந்து கொண்டார்.

    இரவில் ஆனந்த நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பத்ர பூஞ்சப்பரத்தில் பச்சை பட்டாடை உடுத்தி வில்வம், மரிக்கொழுந்து மற்றும் பச்சை இலை மாலை அணிந்து பச்சை சாத்தி திருவீதி உலா நடைபெற்றது.

    பின்னர் வெட்டும் குதிரை வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடந்தது. இந்நிகழ்ச்சியின் உபயதாரர் டி.சி.டபுள்யூ நிறுவனத்தின் அதிகாரி ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் குழுவினர் செய்திருந்தனர். விழாவில், கோவில் மணியம் சுப்பையா, டி.சி.டபிள்யூ உதவி தலைவர் சுரேஷ், அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், நடராஜன், சங்கரலிங்கம், கற்பகவிநாயகம், தங்கமணி, கீழவீடு கார்த்திகேயன், அமிர்தராஜ், ராஜாமணி, பேராசிரியர்கள் அசோக் குமார், கதிரேசன், இளைய பெருமாள், தொழிலதிபர்கள் பூபால் ராஜன், தியாகராஜன், தவமணி, செல்வ பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 9-வது திருநாளை முன்னிட்டு காலையில் சுவாமி பிக்ஷாடனராக எழுந்தருளி சப்பரபவனி நடந்தது. இரவில் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமி அம்பாள் பூஞ்சப்ப ரபவனியும் சிறப்பு தீபா ராதனையும் நடக்கின்றன. நிறைவு நாளான நாளை இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடை பெறுகிறது.

    ×