என் மலர்
நீங்கள் தேடியது "santhanakrishnan Campaign"
சென்னை:
வடசென்னை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி. சந்தானகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். திரு.வி.க.நகர் தொகுதி 72 தெற்கு, வடக்கு மற்றும் 73 கிழக்கு வட்ட பகுதிகளுக்கு உள்பட கன்னிகாபுரம், நரசிம்மன்நகர், புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது, வட சென்னை தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அல்லும் பகலும் பணிபுரிவேன். மத்திய அரசின் திட்டங்களை தொகுதி மக்களுக்கு பெற்றுத்தர எனக்கு பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார். அவருடன் திரு. வி.க.நகர் பகுதி செயலாளர் வி.சுகுமார், மாவட்ட அவைத் தலைவர் பி.சுகுமார், மாவட்ட துணை செயலாளர் டி.வி.நாசர், மகளிர் அணி மாவட்ட செயலாளர் அன்னக்கிளி, வட்ட செயலாளர்கள் டி.கே.குமார், ஏ.என்.கொண்டல்ராவ், சாம்ராஜ், ஜி.ஆர். சதீஷ் குமார், கே.ஏ.பாலகணேசன், ஜி.ஆர்.வினோத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் சென்று வாக்கு சேகரித்தனர். #LoksabhaElections2019 #AMMK






