search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandhyakapar"

    • புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர்பவனி நடந்தது.
    • பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் தீவு பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் பங்திகேற்பார்கள்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வேர்க்காடு பகுதியில் 480 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. தேர் பணிக்கு முன்னதாக மாலை 6 மணிக்கு மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கு பணியாளர் மற்றும் வட்டார அதிபர் ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் பிராத்தனை கூட்டம் நடந்தது. இரவு 9 மணி அளவில் சாமி சந்தியாகப்பர் மற்றும் மரியாள் மற்றும் தூதர் மின் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் பவனி வந்தனர். இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரை தரிசனம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திர ராமாவன்னி, ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான், நகர்மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆலய பங்குதந்தை செபஸ்டின், பாம்பன் பங்குத்தந்தை இயேசு ஜெயராஜ், மண்டபம் பகுதி பங்குத்தந்தை ஜான் ராபர்ட், ராமேசுவரம் பகுதி பங்குத்தந்தை தேவசகாயம், தென்குடா பங்குத்தந்தைகள் சுந்தர்ராஜ், அருள்ராஜ், விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், அரியாங்குண்டு கிராமத்தலைவர் சந்தியாதாஸ், தென்குடா கிராமத்தலைவர் அந்தோணி சந்தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்மதத்தினர் பங்கேற்பு

    இந்த புனித யாகப்பர் ஆலயத்தில் ஏறத்தாழ 480 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் தீவு பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் பங்திகேற்பார்கள். இந்த திருவிழாவில் இந்துக்கள் அதிகமாக கலந்து கொண்டு முடி்காணிக்கை செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    ×