search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand trucks stop"

    லாரி உரிமையாளர்கள் இன்று நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் செல்ல.ராஜா மணி தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு முழு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இதனால் 75 ஆயிரம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்பு நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் 40, ஆயிரம் மணல் லாரிகள் லோடுகளை ஏற்றி வந்தன. தற்போது ஆன்லைன் வர்த்தகம் வந்த பின் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மணல் லாரிகளுக்கு மட்டுமே லோடு கிடைப்பதால் மற்ற லாரிகள் லோடு கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஓட்டுநர் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, 8-ம் வகுப்பு படித்தவர்களுக்குத்தான் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட காரணங்களால் 30 சதவீத லாரிகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் மணல் லாரி தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லாரி சங்கங்கள் இரண்டாக செயல்படுகின்றன. இதில் ஒரு சங்கம் இன்றும், மற்றொரு சங்கம் ஜூலை மாதம் 20-ந் தேதியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. லாரி சங்கங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் தான் லாரி தொழிலை காக்க முடியும். எனவே லாரி சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×