என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samsung Galaxy Z Fold 4"

    • சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6-இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    • சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஆனது பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய போன்களான கேலக்ஸி Z Fold 4 மற்றும் கேலக்ஸி Z Flip 4 ஆகிய மாடல்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ள அன்பேக்டு ஈவண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரவும் வாய்ப்புள்ளது. கேலக்ஸி Z Fold 3 மற்றும் Flip 3 மாடல்களை போன்றே Z Fold 4 மற்றும் கேலக்ஸி Z Flip 4 ஆகியவற்றின் டிசைன் இருக்கும் என்றும், ஹார்டுவேரில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி Z Fold 4 போன் ஜீக்பெஞ்சில் SM-F936U என்கிற மாடல் நம்பருடன் தோன்றி உள்ளது. இதில் உள்ள F என்பது மடிக்கக்கூடியது என்பதை குறிக்கிறது. இதன்மூலம் அந்த போன்களின் ஆண்ட்ராய்டு வெர்ஷன், ரேம் சிப்செட் போன்றவற்றின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது. மேலும் 12 ஜிபி ரேம்மையும், குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen1 சிப்செட்டையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6-இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவை 120Hz புதுப்பிப்பு வீதம், HDR10+, டால்பி விஷன் மற்றும் செல்ஃபிக்களுக்கான இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டிருக்குமாம்.

    பிரீமியம் ஃபோனுக்கு 25W மிகவும் மெதுவாக இருப்பதால், சாம்சங் ஃபோல்ட் 4 இல் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஆனது பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இதில் 50MP முதன்மை கேமரா, 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3X ஜூம் கொண்ட 12MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும்.

    ×