என் மலர்
நீங்கள் தேடியது "Samai Uthappam"
- அரிசி ஊத்தப்பம் சாப்பிடும்போது வெறும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது.
- புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள் போன்றவையும் கிடைக்கும்.
வழக்கமாக அரிசி ஊத்தப்பம் சாப்பிடும்போது வெறும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது. ஆனால் அதையே சாமை அரிசியில் ஊத்தப்பம் செய்து சாப்பிடும் போதும் புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள் போன்றவையும் கிடைக்கும். இது அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டியாக அமையும்.
தேவையான பொருட்கள்:
சாமை - 100 கிராம்
பச்சரிசி, ஜவ்வரி இரண்டும் சேர்த்து - 4 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 25 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு.
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய கேரட், தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன்
பொடித்த முந்திரி - 25 கிராம்
ஊறிய கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் (அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, முந்திரி ஆகியவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை சூடுசெய்து எண்ணெய் விட்டு, மாவை தடிமனாக வார்த்து மேலே தூவவேண்டிய பொருட்களை தூவி, இருபுறமும் வேக விட்டு எடுத்தால் சுவையான சாமை ஊத்தப்பம் தயார். அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.... பரிமாறலாம்.






