search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salthi Vinayagar Temple"

    • சக்திவிநாயகர் கோவில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 11-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
    • தொடர்ந்து அலங்கரி க்கப்பட்ட விநாயகர் சிலையுடன் பால்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் புது கிராமம் விநாயகர் கோவிலுக்கு புறப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்து பிள்ளைமார் சமுதா யத்துக்கு பாத்தியப்பட்ட சக்திவிநாயகர் கோவில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 11-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    சதுர்த்தி ஊர்வலம்

    அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர்பூஜை, மஹா சங்கல்பம், புண்யாக வாகனம், கும்பபூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்களும், 6.30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்தது.

    காலை 10 மணிக்கு சக்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பகுதியில் சென்று ஊர்வலம் கோவில்பட்டி ெரயில்வே நிலையம் விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அலங்கரி க்கப்பட்ட விநாயகர் சிலையுடன் பால்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் புது கிராமம் விநாயகர் கோவிலுக்கு புறப்பட்டது.

    கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.

    ஊர்வலத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார். இல்லத்து பிள்ளைமார் சங்கத் தலைவர் சங்கரன், தொழிலதிபரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துராஜன், குருமூர்த்தி, ராம்கி, மாரிக்கண்ணன், தனசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலத்தில் குழந்தைகள் சிவன், கருப்பசாமி, கிருஷ்ணன், பாரத மாதா உள்ளிட்ட வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.

    அதுபோல், ஊர்வலத்தில் சிலம்பாட்டம் நடந்தது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்கம், இல்லத்துப்பிள்ளைமார் இளைஞர் சமூக சங்கம், சங்கடஹர சதூர்த்தி நண்பர்கள் குழு ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    ×