என் மலர்
நீங்கள் தேடியது "sahitya Academy"
- தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
புதுடெல்லி:
தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாகித்ய அகாடமி–யின் 2025-ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லி சாகித்ய அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
தமிழில் ''ஒற்றை சிறகு ஓவியா'' என்ற நாவலுக்காக பால புரஸ்கார் விருதை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றார்.
மேலும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
- தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதனின் பொம்மை என்ற நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
- திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
தமிழக நூலுக்கான சாகித்ய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிய முடியும்.
இதேபோல், திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராம் தங்கம் கூறுகையில், விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல விருதுகள் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
- யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.
- தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.
தமிழில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'தன்வியின் பிறந்தநாள்' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.
2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வெளியான தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.






