search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala Tantri"

    பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்யவில்லை என்று சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு விளக்கம் அளித்துள்ளார். #Sabarimala #Tantri
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 2-ந்தேதி 50 வயதுக்குட்பட்ட கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்று கோவில் தந்திரி சன்னிதானத்தை தூய்மைப்படுத்தி பரிகார பூஜை செய்ததாக கூறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இந்நிலையில் ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு 11 பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சித்திர ஆட்ட விழா மற்றும் மண்டல-மகரவிளக்கு விழா காலங்களில் ஐயப்பன் கோவில் பல பிரச்சினைகளை சந்தித்தது. இந்த பிரச்சினைகள் எழுந்ததால் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக இதுபோன்ற பரிகார பூஜைகள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. டிசம்பர் 31-ந்தேதி எந்த பூஜைகளும் நடைபெறவில்லை, 1-ந்தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தான் 2-ந்தேதி பரிகார பூஜை செய்யப்பட்டது. பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார். #Sabarimala #Tantri

    சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருவை பதவியில் இருந்து நீக்க அம்மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து தேவசம்போர்டு விளக்கம் அளித்துள்ளது. #Sabarimala #SabarimalaTantri
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்துக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த வாரம் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இது தொடர்பாக சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக கண்டரரு ராஜீவருவை தந்திரி பதவியில் இருந்து நீக்க மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை தேவசம்போர்டு மறுத்து உள்ளது. மகரவிளக்கு பண்டிகையை சீர்குலைக்கவே இந்த சர்ச்சை கிளப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.  #Sabarimala #SabarimalaTantri
    ×