என் மலர்
நீங்கள் தேடியது "Russian soldiers killed"
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ரஷியா படைவீரர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், சிரியாவின் டெர் எசோர் மாகாணத்தில் உள்ள ஒரு அரசு ஆயுத கிடங்கு மீது நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரஷிய ராணுவத்தை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews






