search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruby Manokaran"

    • டாக்டர்களை சந்தித்து, சிறுவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தி தீவிர சிகிச்சை கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
    • அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ரூபி மனோகரன் கேட்டுக்கொண்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட புளியூர்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள டோனாவூர் கிராமத்தில் பட்டாசு விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் டோனாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்

    அங்கு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் நேரில் சென்று சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

    அப்போது டாக்டர்களை சந்தித்து, தகுந்த சிகிச்சை அளிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தி தீவிர சிகிச்சை கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

    குடிநீர் பிரச்சினை

    தொடர்ந்து, டோனாவூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அரசு அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்பு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு கண்ணாடி தேவைப்படும் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை நாங்குநேரி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கினார்.

    பயணிகள் நிழற்குடை

    மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருக்குறுங்குடி டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளிக்கு உட்புறம் பேவர் பிளாக் அமைத்திட வேலையை தொடங்கி வைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பர்கிட்மாநகர் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்திட வேலையை தொடங்கி வைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு தலைவர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு, பாளையங்கோட்டை வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, ஆகிய வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் அலெக்ஸ், கனகராஜ், கணேசன், சங்கரபாண்டியன்நளன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வசந்தா, மாநில மகிளா காங்கிரஸ் இணை செயலாளர்கமலா, பிரியாமுருகன், லதா லெட்சுமி, திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவி, துணை தலைவி, பாளையங்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தெய்வாணை, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, ராபர்ட்சுஜூன், வட்டார துணை தலைவர் செல்வராஜா, கவுன்சிலர் பெல், கிராம காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எபன்ரஞ்சித்சிங் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×