என் மலர்
நீங்கள் தேடியது "Rs.20 thousand bribe"
- வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
- லஞ்சமாக ரூ.20 ஆயிரம் பெற்றதாக கூறப்ப டுகிறது. இந்த தொகையை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மேனகாவும், சிறப்பு எஸ்.ஐ.யாக சுமதி, ஏட்டாக அம்சவள்ளி உள்பட பலர் பணியாற்றி வந்தனர்.
காதல் ஜோடி
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. போலீஸ் நிலையத்தில் அவர்களது பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய 3 பேரும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இதற்கு லஞ்சமாக ரூ.20 ஆயிரம் பெற்றதாக கூறப்ப டுகிறது. இந்த தொகையை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதமாக மாறியது. இதனால் போலீஸ் நிலையத்திலேயே காரசாரமாக மோதி கொண்டனர். இந்த தகவல் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சென்றது.இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது காதல் ஜோடியை சேர்த்து வைக்க பணம் பெற்றதும், பங்கு போடுவதில் தகராறு செய்ததும் உறுதியானது.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இதையடுத்து 3 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறை ரீதியதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






