என் மலர்
நீங்கள் தேடியது "Rs. 12.5 lakh fraud"
- பெண் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேலை வாங்கி தருவதாக போலி வாக்குறுதி கொடுத்து மோசடி செய்து விட்டனர்.
கோவை:
தஞ்சாவூர் மாவட்டம் வாழமரக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தரேசன்(28). தனியார் வங்கி ஊழியர். இவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை பாப்பநாயக்கன்பாளையம் எல்.எம்.எஸ் தெருவில் உள்ள கன்சல்டன்சி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்தேன். அப்போது அங்கு வேலைபார்த்த பெரியநாயக்கன்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த சுபாஷினி(25), கரூரை சேர்ந்த அசோக்குமார்(30) ஆகியோர் டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர்.
மேலும் அவர்களிடம் ரூ.5.25 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். பணத்தை திருப்பி கேட்டபோது திருப்பி கொடுக்கவில்லை.
பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருவரும் வேலை வாங்கி தருவதாக போலி வாக்குறுதி கொடுத்து மோசடி செய்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் மகேஷ்வரன்(33) என்ற தனியார் வங்கி ஊழியரும், சுபாஷினி மற்றும் அசோக்குமார் ஆகியோர் டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் ரூ. 7.25 லட்சம் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இருவர் அளித்த புகாரின் பேரிலும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சுபாஷினி மற்றும் அசோக்குமார் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






