search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Enfied"

    • இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம் ஆகும்.
    • ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர் கூல்டு என்ஜின் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹன்டர் 350 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இவை டேப்பர் ஒ மற்றும் டேப்பர் ஜி என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த மாடல் டேப்பர் வைட் மற்றும் டேப்பர் கிரே என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


     

    புதிய டேப்பர் ஒ நிற வேரியண்டின் ஃபியூவல் டேன்க் மீது டீப் ஆரஞ்சு பேஸ் நிறமாகவும், RE லோகோ மற்றும் ஸ்டிரைப்கள் அதன் மீதும் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஆங்காங்கே வைட் நிற கோடுகள் இடம்பெற்றுள்ளன. டேப்பர் ஜி வேரியண்டில் பேஸ் நிறமாக பிரிடிஷ் கிரீன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.


     

    நிறங்கள் தவிர ஹன்டர் 350 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த பைக் லிட்டருக்கு 36 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹன்டர் 350 பைக் டி.வி.எஸ். ரோனின் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

    ×