என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery attempt in gummidipoondi"

    கும்மிடிப்பூண்டி அருகே கொள்ளை முயற்சியில் டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் குத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று இரவு 10 மணியளவில் விற்பனையாளர் முரளி இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கத்தி முனையில் முரளியிடம் விற்பனையான பணத்தை கேட்டு மிரட்டினர். அதற்கு முரளி சூப்பர்வைசர் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார் என்று கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், கத்தியால் முரளியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த முரளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

    இதற்கிடையில் கும்மிடிப்பூண்டி பகுதியில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு போலீசார் டாஸ்மாக் ஊழியர்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு ஒன்றும் அனுப்பப்பட்டு உள்ளது.
    ×