search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadside blast"

    ஆப்கானிஸ்தானின் ஹெல் மாண்ட் மாகாணத்தில் தலீபான்கள் நடத்திய குண்டுவெடிப்பில் அமெரிக்க சிறப்பு படை வீரர் ரேமண்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Afghanistan
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு அமெரிக்க படைகள் பக்க பலமாக இருந்து வருகின்றன. இதற்காக அமெரிக்க படையினர் மீது தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் ஹெல் மாண்ட் மாகாணத்தில் தலீபான்கள் நடத்திய குண்டுவெடிப்பில் அமெரிக்க சிறப்பு படை வீரர் ரேமண்ட் ராரோகல் டிரான்ஸ்பிகரேசன் (வயது 36) சிக்கி படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அவர் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

    இதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் நேற்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

    பலியான ரேமண்ட், பிலிப்பைன்சில் பிறந்தவர் ஆவார். அமெரிக்க படையில் 2008-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்காக சண்டையிட்டு பதக்கம் பெற்ற சிறப்பான வீரர் என தகவல்கள் கூறுகின்றன.

    ரேமண்ட் உயிர்ப்பலிக்கு காரணமான ஹெல்மாண்ட் மாகாண குண்டுவெடிப்பு பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
    ×