என் மலர்
நீங்கள் தேடியது "Road alignment"
- களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
- வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடைகள் சாலையில் தேங்கி சாலை சேதமடைந்துள்ளது.
களக்காடு:
களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
அப்பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடைகள் சாலையில் தேங்கி சாலை சேதமடைந்துள்ளது.
தற்போது சாரல் மழையும் பெய்து வருவதால் சாலையில் உள்ள குண்டு-குழிகளில் தண்ணீர் தேங்கி சாலை குளமாக மாறி உள்ளது.
இதனால் சாலையை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் வருவோர் குண்டும், குழியுமான சாலையில் சிக்கி கீழே விழுவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இச்சாலை களக்காடு-நாங்குநேரி பிரதான சாலை ஆகும்.. எனவே பழுதடந்து கிடக்கும் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






