search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Bran"

    • தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
    • 30 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதமுள்ள 70 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேளாண்துறை இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப அரசின் சான்று பெற்ற விதை நெல் அரசு மூலமாகவும், அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் 5 அல்லது 6 வாரங்களில் அறுவடை பணிகள் நடை பெற உள்ளது.

    இந்நிலையில் வலங்கை மான் வட்டம் தென்கரை ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இத்தகைய தனியார் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட அரசு சான்று பெற்ற விதை நெல் ரகம் கோ.51 என்ற விதை நெல்லை, வெங்கடேசன்,சுகுமார், சீனிவாசன், குரு சீனிவாசன், கணேசன்,வீரமணிபோன்ற ஏராளமான விவசாயிகள் வாங்கி சுமார் நூற்றுக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் கோ.51 ரகம் பயிரிடப்பட்ட வயல்களில் 30 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதம் உள்ள 70 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வேளாண்துறை கட்டுப்பா ட்டில் செயல்படும் விதை நெல்லை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனம்.

    அரசு சான்று பெற்ற விதை நெல்லின் தரமற்ற விதை நெல்லை கலப்படம் செய்தனரா?

    அல்லது குறுவை நெல்லுடன் சாம்பா, தாளடி போன்ற நெல்லை கலந்து விற்பனை செய்தனராா?

    என் பிரச்சினை எழுதுவதாகவும் இதற்கு வேளாண் துறை அதிகாரிகளே முழு பொறுப்பு என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    தென்கரை ஆலத்தூர் கிராமத்தில் நூற்றுக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள குறுவை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    போலி கலப்பட விதை நெல்லால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் தான் விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அரசு போலி கலப்பட விதை நெல் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, கலப்பட விதை நெல்லால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி அதன் மூலம் அடுத்த கட்ட சம்பா, தாளடி பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள அரசு பேருதவியாக இருக்க வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

    ×