என் மலர்
நீங்கள் தேடியது "Retired employees"
2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சொர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற மறுநாள் ஊதிய உயர்வுக்கான நாளாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வை வழங்கலாம் என்று 2014-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2014 டிசம்பர் 31-ந்தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த சலுகை 2014 டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சலுகையை மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.