search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Repairing Christian churches"

    • சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம்
    • இப்பணிக்காக தமிழக அரசு நிதியுதவியை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிக்காக தமிழக அரசு நிதியுதவியை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வழங்கிட அரசு தயாராக உள்ளமையால், கிறிஸ்துவ தேவாலயங்களிடமிருந்து அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான தகுதிகள் கிறிஸ்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

    சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.in- இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிறசேர்க்கை –1,3யை பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறிஸ்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்ட–டத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகிய–வற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    ×