search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removing Work"

    • 3.5 கி.மீ தொலைவில் உள்ள சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் செல்கிறது.
    • பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட செந்தேவிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே செந்தேவிபாளையம் தடுப்பணை உள்ளது.செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து ராஜவாய்க்கால் மூலமாக சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ள சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் செல்கிறது.தற்போது நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் வரும் நீர்வழிப்பாதையான ராஜவாய்க்காலில் ஆகாயத்தாமரைகள்,செடிகொடிகள் இருந்ததால் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள், செடிகொடிகளை அகற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பின்னர் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து சாமளாபுரம் குளம் வரை நொய்யல் நீர் செல்லும் நீர்வழிப்பாதையில் இருந்த ஆகாயத்தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.பி.கந்தசாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி ஆகியோர் ராஜவாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டனர்.இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் ,மற்றும் சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகளான கனகசபாபதி, உள்தோட்டம் மணி ,பி.வி.எஸ்.பொன்னுச்சாமி , பொன்னுச்சாமி , திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×