என் மலர்

  நீங்கள் தேடியது "removed from the"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னியம்மாளின் வயிறு நாளுக்கு நாள் வீக்கம் அடைந்து கொண்டு வந்தது. உடனடியாக அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் காட்டிய போது அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
  • அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  பெருந்துறை:

  ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளை யத்தை அடுத்துள்ள பெரிய கோரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சென்னியம்மாள் (வயது 45). இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை.

  இந்த நிலையில் சென்னியம்மாளின் வயிறு நாளுக்கு நாள் வீக்கம் அடைந்து கொண்டு வந்தது. உடனடியாக அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் காட்டிய போது அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

  பின்னர் சென்னியம்மாள் கடந்த வாரம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சாந்தி ராஜேந்திரன் சென்னியம்மாளை பரிசோதித்து பார்த்தார். அப்போது அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பது தெரிய வந்தது. அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

  அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் இருந்து 4½ கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

  ×