search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "remove links"

    பேஸ்புக், கூகுள், யுடியூப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பாபா ராம்தேவுக்கு எதிரான வீடியோவுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #BabaRamdev #Facebook #Google
    புதுடெல்லி:

    யோகா குரு பாபா ராம்தேவ் பற்றி ‘காட்மேன் பிரம் டைகூன்’ (தொழில் அதிபராக இருந்து சாமியார் ஆனவர்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    அதில் பாபா ராம்தேவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அவற்றை நீக்கும்வரையில், அந்த புத்தகத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. ஆனால் நீக்கப்படாத பகுதிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ இணைப்பாக (லிங்க்) வெளியானதாக தெரிகிறது.

    இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி பிரதிபா சிங் முன்னிலையில் பாபா ராம்தேவ் சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் நய்யார் நேற்று முறையிட்டார்.

    அதைத் தொடர்ந்து, ‘காட்மேன் பிரம் டைகூன்’ புத்தகத்தின் நீக்கப்படாத பகுதிகளை பார்க்க உதவும் வீடியோ இணைப்பை நீக்க வேண்டும் என்று பேஸ்புக், கூகுள், யுடியூப், டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிபதி பிரதிபா சிங் உத்தரவிட்டார்.
    ×