என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "removal of idols"

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது முழு உருவச்சிலை, இரவோடு இரவாக வைக்கப்பட்டது.
    • இதனிடையே அனுமதியின்றி இந்த சிலை வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் நகரின் மையப் பகுதியில் கடந்த 3-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது முழு உருவச்சிலை, இரவோடு இரவாக வைக்கப்பட்டது.

    இதனிடையே அனுமதி யின்றி இந்த சிலை வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் தாசில்தார் அன்புச்செழியன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த சிலையை நிறுவியது யார்? எப்போது வைத்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலை அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சிலையை அற்ற வேண்டும் என வருவாய்த் துறையினர் கடந்த 3 நாட்களாக கூறி வந்தனர்.

    ஆனால் யாரும் சிலை அகற்ற முன்வராத நிலையில், நேற்று இரவு அந்த சிலையை ஏத்தாப்பூர் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தற்போது சிலை பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது சமுதாயக்கூடம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை பாதுகாப்பில்லாமல் இருப்பதால், அந்த சிலையை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஏத்தாப்பூர் போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 

    ×