என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rejection of love"

    • காதலை ஏற்க பெற்றோர்கள் மறுப்பு
    • திருமண ஏற்பாடு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு முடித்தார்.

    கடந்த 2 வருடமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவர் தனது பெற்றோரிடம் தான் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்து விட்டனர்.

    அதன் பிறகு பெற்றோர்கள் தனது மகளுக்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதனால் திருப்பூரில் இருந்த தனது மகளை கடந்த 6-ந் தேதி வீட்டிற்கு வரவழைத்தனர்.

    வீட்டிற்கு வந்த மைனர் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்வது குறித்து தகவல் தெரிந்தது. இதனால் கடந்த 8-ந் தேதி இரவு 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மைனர் பெண் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இவரது பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.

    ஆனால் எங்கும் கிடைக்காததால் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×