என் மலர்
நீங்கள் தேடியது "Recovery Training"
- முதலுதவி, ஆபத்து காலத்தில் ஸ்ட்ரெச்சர் அமைத்தல் போன்ற ஒத்திகை பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
- பயிற்சியில் தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவின் தலைமை கமாண்டர் சந்தீப்குமார் உள்ளிட்ட 25 காவலர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள முன்னெச்சரிக்கைகள், தடுப்பு நடவடிக்கை ஒத்திகை தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடைபெறுகிறது. இதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒத்திகை நடைபெற்றது. பயிற்சியில் தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவின் தலைமை கமாண்டர் சந்தீப்குமார் உள்ளிட்ட 25 காவலர்கள் ஈடுபட்டனர். சி.பி.ஆர்., எப்.பி.ஓ. பயிற்சி, வெள்ளம் கால மீட்பு பயிற்சி, முதலுதவி, ஆபத்து காலத்தில் ஸ்ட்ரெச்சர் அமைத்தல் போன்ற ஒத்திகை பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதுபோன்று திருப்பூர் குமரன் பெண்கள் கல்லூரியிலும் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.






