search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Realme 2"

    ஒப்போ துணை பிரான்டு ரியல்மி இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. #RealMe2



    ஒப்போ துணை பிரான்டு ரியல்மி இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ரியல்மி 2 முதல் விற்பனை ஐந்து நிமிடங்களே நீடித்தது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற்ற ஃபிளாஷ் விற்பனையில் இரண்டு லட்சம் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது ஃபிளாஷ் விற்பனையில் சுமார் 1.7 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இரண்டு விற்பனையில் சேர்த்து மொத்தம் 3.7 லட்சம் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்தியாவில் ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் சேர்த்து சுமார் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. ரியல்மி 1 அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ரியல்மி 2 அறிமுகமாகி இரண்டு வாரங்களே ஆகி்யுள்ளது.

    சமீபத்தில் ரியல்மி பிரான்டு விளம்பர படம் ஒன்றை வெளியிட்டது. நியூ யார்க் நகரில் படமாக்கப்பட்டு இருக்கும் விளம்பர படத்தில் மூன்று இளைஞர்கள் வெவ்வேறு சூழல்களை எதிர்கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது. இந்தியாவைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் விரைவில் விற்பனையை துவங்க இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது.

    முன்னதாக ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை புதிய டீசர் புகைப்படம் மூலம் ரியல்மி அறிவித்தது. அதன்படி ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகமான நிலையில், ரியல்மி 2 ப்ரோ அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme2Pro



    இந்தியாவில் கடந்த மாதம் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில், ரியல்மி 2 ப்ரோ மாடல் விரைவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், தலைசிறந்த அம்சங்களுடன் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய டீசர் வீடியோவில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ரியல்மி வெளியிட்டிருக்கும் டீசரில் “Realme, Proud to be Young” என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் அதிக சக்திவாய்ந்ததோடு அழகாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 2 ப்ரோ அறிமுக தேதி போஸ்டர். 



    டீசரின் படி ரியல்மி 2 ப்ரோ வடிவமைப்பு முந்தைய ரியல்மி 2 போன்று காட்சியளிக்கிறது. எனினும் இதன் சிறப்பம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 2 ப்ரோ வீடியோ டீசரை கீழே காணலாம்.


    புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புற கைரேகை சென்சார், கிளாஸ் போன்ற பின்புறம், ரியல்மி பிரான்டிங் கொண்டிருக்கிறது. எனினும் டைமன்ட்-கட்டிங் வடிவமைப்பு புதிய மாடலில் வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு புதிய நிறங்களில் ரியல்மி 2 ப்ரோ அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி 2 முதல் ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் நடைபெற்ற நிலையில், இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RealMe2



    ஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டான ரியல்மி தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனான ரியல்மி 2 மாடலை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது.

    ரியல்மி 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.8,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிளாஷ் முறையில் இதன் முதல் விற்பனை நேற்று (செப்டம்பர் 4) மதியம் 12.00 மணிக்கு துவங்கியது. ஐந்து நிமிடங்கள் நீடித்த விற்பனையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்று தீர்ந்ததாக ரியல்மி அறிவித்துள்ளது.



    ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:

    – 6.2 இன்ச் 1520×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    – 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    – அட்ரினோ 506 GPU
    – 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    – 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    – கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
    – 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    – 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
    – கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
    – 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் டைமன்ட் பிளாக், டைமன்ட் ரெட் மற்றும் டைமன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் 3 ஜிபி வேரியன்ட் விலை ரூ.8,990 என்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முதல் ஃபிளாஷ் விற்பனை இரண்டு நிமிடங்களில் நிறைவுற்ற நிலையில் அடுத்த விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் அசத்தல் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்த மாதமே அறிமுகம் செய்வதாக ரியல்மி அறிவித்துள்ளது.
    ×