search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCB bowlers"

    • பந்து வீச்சில் ஆர்சிபி அணியின் 4 பவுலர்கள் அரைசதம் விளாசினர்.
    • அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 68 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

    பெங்களூருவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இந்த சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் பவுலிங் சரியில்லை என்று அவருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், அவரும் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 52 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும், ரீஸ் டாப்லி 68 ரன்களும், வைஷாக் விஜயகுமார் 64 ரன்களும், யாஷ் தயாள் 51 ரன்களும் வாரி வழங்கினர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்வதை கண்ட விராட் கோலி மைதானத்திலேயே மனமுடைந்து நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மோசமான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசியதை கண்ட விராட் கோலி ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே திட்டித் தீர்த்தார். அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.

    இதனை கண்ட ரசிகர்கள் பீல்டிங் நின்றால் சுறுசுறுப்பாக இருக்கும் அந்த வீரரை இப்படி கண்கலங்கும் வகையில் நிற்க வைத்து வீட்டீர்களே என ஆர்சிபி பவுலர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

    ஆர்சிபி ரசிகர்கள் தவிர மற்ற ரசிகர்கள் விராட் கோலிக்காக ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×