என் மலர்

  நீங்கள் தேடியது "Rama Mohana Rao"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் நடிகர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்தார். அவர் கட்சியின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். #RamaMohanaRao #PawanKalyan
  நகரி:

  தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாளராக பணியாற்றியவர்.

  ஆந்திராவை சேர்ந்த அவர் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்துள்ளார். விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்துக்கு சென்ற ராமமோகனராவ், நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவரை கட்சியின் சட்ட ஆலோசகராக பவன் கல்யாண் நியமனம் செய்தார்.

  இதையடுத்து ராமமோகனராவ் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நடிகர் பவன்கல்யாண் கூறியதாவது:-

  மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராமமோகனராவிடம் ஜனசேனா கட்சி தலைவரின் அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். அவர் சிறந்த அரசியல் ஆலோசகராக திகழ்ந்த அனுபவம் உள்ளவர்.

  தமிழக அரசியலில் தனது அனுபவத்தின் மூலம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது இக்கட்டான சூழ்நிலையில் அரசு நிர்வாகத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக நடத்தியவர். என் மீது நம்பிக்கை வைத்து எனது அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொண்டார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தமிழகத்தில் ராமமோகனராவ், அவரது மகன் வீட்டில் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RamaMohanaRao #PawanKalyan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகராவ் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
  சென்னை:

  ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  இதில் அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள், அரசு செயலாளர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி உள்ளனர்.

  இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் 3 முறை ஆஜராகி இருந்தார்.

  இப்போது அவரிடம் மேலும் சில விவரங்களை கேட்பதற்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் ராமமோகனராவ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
  ×