என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raghavendra Seva Foundation Founder"

    • மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்திய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அதிவேக தொடர்வண்டி வந்தே பாரத் ஆகும்.
    • விருதுநகரில் நின்று செல்லும் வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்காமல் புறக்கணிப்பதால் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    வந்தே பாரத் ெரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என ஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்திய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அதிவேக தொடர்வண்டி வந்தே பாரத் ஆகும். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த வந்தே பாரத் ரெயிலில் பயணிப்பதின் மூலமாக பயணிகள் தங்களது நேரத்தை மிச்சப்ப டுத்தலாம். அதோடு விமானத்தில் உள்ளதைப் போல குளிர்சாதனம் வசதி, கழிவறை வசதி, ஒளிபரப்பு வசதி, கண்காணிப்பு காமிரா வசதி என பல்வேறு வசதி களையும் அனுபவிக்கலாம்.

    ஏற்கனவே பல வட மாநிலங்களில் அறிமுகப்ப டுத்தப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் வந்தே பாரத் ரெயில் தற்போது சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை வந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அது அதிநவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் தொடர்வண்டி 8 பெட்டிகளைக் கொண்டது.

    இந்த ரெயில் கோவில்பட்டியில் நிற்காது என்ற தகவல் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்கிறது. கோவில்பட்டி ரெயில் நிலையம் மதுரை கோட்டத்தில் அதிக லாபம் ஈட்டும் நிலையங்களில் 3-வதாக இருக்கிறது.

    மாதம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானத்தை ஈட்டி தரும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி நிலையமும் ஒன்றாகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியைச் சேர்ந்த கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு என 5 வட்டங்கள் மற்றும் விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 3 வட்டங்கள் என்று மொத்தத்தில் 3 மாவட்டங்களில் 8வட்டங்களை சேர்ந்த மக்கள் கோவில்பட்டி ெரயில் நிலையத்தின் மூலமாக தினந்தோறும் பயணம் செய்கின்றனர்.

    விருதுநகரில் நின்று செல்லும் வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்காமல் புறக்கணிப்பதால் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. இரண்டு முறை தென்னக ெரயில்வே பொது மேலாளரை நேரடியாக சந்தித்து மனு கொடுத்துள்ள நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் ெரயில்வே துறைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற னர்.

    எனவே மக்கள் சேவையை மகேசன் தேவை என்ற தத்துவத்தின் அடிப்படையில் தென்னக ெரயில்வே தொழில் நகரமான கோவில்பட்டியில் வந்தே பாரத் ெரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×