என் மலர்
நீங்கள் தேடியது "r tasmac shop robbery"
செங்குன்றம்:
சோழவரம் அருகே ஆத்தூரில் உள்ள பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.
அப்பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து சென்றபோது, டாஸ்மாக் கடையின் பின்புறம் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்தனர்.
உடனே டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். கடையை திறந்தபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை ஊழியர்கள் மறைவான இடத்தில் வைத்ததால் தப்பியது.
இது குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்.
புழல் அருகே மேக்கரா மார்வெல் நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் புழல் பாலாஜி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது ரூ.10 ஆயிரம் பணம், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருந்தது.






