என் மலர்
நீங்கள் தேடியது "R Parthiban"
- தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தில் தெலுங்கு நடிகையான ஷாலினி பாண்டே தனுஷின் தங்கை கதாப்பாத்திரத்திலும் மற்றும் அருண் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அதற்கான டப்பிங் பணிகளை நேற்று முடித்துள்ளார் அப்போது தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரது பாணியில் நக்கல் மற்றும் நய்யாண்டியுடன் சில வார்த்தைகளை கூறியுள்ளார்.
அதில் "இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய 'ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ' சூதாடி' இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ' இட்லி கடை'யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.
இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு,எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன்
இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!!" என பதிவிட்டுள்ளார்.
திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை என்ன சுகம் பாடலை படக்குழு வெளியிட்டது அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற இணைய தொடர் செங்களம்.
- ஆர். பார்த்திபன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார்.
"சுந்தர பாண்டியன்", "இது கதிர்வேலன் காதல்" போன்ற திரைப்படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் பிஜு. வி. டான் பாஸ்கோ. இவர் சமீபத்தில் வெளியான "செங்களம்" வெப் தொடருக்கு எடிட்டிங் செய்து இருந்தார். இந்த வெப் தொடர் பலராலும் பாராட்டப்பட்டது.
இவரது மூத்த மகன் பினு.டி. ஜான் பாஸ்கோ, தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "கோல்மால்" என்ற திரைப்படம் முழுக்க முழுக்க மொரிஷியஸில் படமாக்கப்பட்டது. அதில் அவர் நடித்த பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அதில் முக்கியமாக தமிழ் திரைப்பட துறையில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஆர். பார்த்திபன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார். படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் வெளிவந்த பிறகு அவர் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத குழந்தை நட்சத்திரமாக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக இயக்குனர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப்.
- மேக்ஸ் திரைப்படம் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மேக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் கிச்சா ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தானு மற்றும் சுதீப் கிச்சா இணைந்து தயாரித்திற்கும் இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். படத்தின் இசையை அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் ஓர் இரவில் ஒரு காவல் நிலையத்திற்கும் நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
திரைப்படத்தில் சுனில், ச்குருதா, சம்யுக்தா , வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அதில் "MAX' imum action உள்ள
ஆனால் மிக தத்ரூபமாக கதையோடு ஒட்டிய திரைக்கதையோடு ஒட்டிய அதிரடி action ஓவ்வொன்றும்! என்னிடம் பணிபுரிந்த விஜயவானன்
இன்று விஜய கார்த்திகேயாவாக மாறி அற்புதமாக இயக்கியிருக்கும் படமென்பதால் கூடுதல் ஆர்வத்துடன் பார்த்தேன். இறுதிவரை சிறு தொய்வில்லாமல் மனுஷன் மிரட்டியிருக்கிறார். நண்பர் தாணுவுக்கு முதலில் வாழ்த்துச் சொல்லி பின் நாயகன் சுதீப் அவர்களிடமும் பேசினேன் . படம் பிடித்து விட்டால் கூடவே பைத்தியமும் பிடித்துவிடும் எனக்கு. இரவெல்லாம் சம்மந்தப் பட்டவர்களைப் பாராட்டியே விடிந்துவிடும். சுதீப் fight செய்யும்போது மாஸ்டர் சொல்லிக்கொடுத்து அடிப்பது போலவேயில்லை. அப்படியொரு body language-ல் action னிலும் actingகிலும் பின்னிப் பெடலெடுக்கிறார். அவர் செய்த fightஐ விட கிட்டத்தட்ட 25 வருடங்கள் fight செய்து வரும் 25 நிஜ HAPPY யாக இயக்குனர் கொண்டாடுவதும் இனி பலரும் அவரை கொண்டாடுவதும் மகிழ்ச்சி!" என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






