என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry youth death"

    • அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மருத்துவமனையில் இல்லை.
    • உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க மருத்துவமனைக்கு உத்தரவு.

    சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் போதிய வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மருத்துவமனையில் இல்லை என்றும் மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×