search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudhumai Pen project"

    • முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆணையை அமைச்சர் வழங்கினார்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர்.

    பல்லடம் :

    அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா பல்லடம் அருகே அருள்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 க்கான ஆணையை வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர். அதில் முதல் கட்டமாக 609 மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மாணவிகளின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு அந்த தொகை அரசால் செலுத்தப்பட்டுவிடும். ஒரு பெண் உயர் கல்வி கற்பதின் மூலம் அக்குடும்பமே முன்னேற்றம் அடையும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பெண் கல்வி வளர்ச்சி அடையும், எதிர்கால சமுதாயம் மேம்பாடு அடையும் என்றார்.விழாவில் திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் , பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாவட்ட சமூக நல துறை அலுவலர் அம்பிகா நன்றி கூறினார்.

    ×