search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public in hill village"

    • மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எடுத்து கூறினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் நடந்தது.

    அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வரவேற்றார். அருணா கல்வி உடல் ஊனமுற்ற இளைஞர் வாழ்வு பற்றி சிறப்புரை ஆற்றினார், சிறப்பு பிரிவு முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர், குழந்தை களின் கல்வி ஒழுக்கம் எஸ்டி மக்களுக்கான வேலை வாய்ப்பு முன்னுரிமை, விவசாய தொழில், குழந்தை திருமணம் தடுத்தல் மேலும்பொதுமக்களும் போலீசும் நண்பர்களாக பழக வேண்டும்.

    போலீசை கண்டு தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை. மலைப் பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் இருப்பி ன் அதனை போலீசுக்கு தகவலை தெரிவிக்க வேண்டும்.

    போலீஸ் தங்களின் நண்பர்கள் என்று எண்ணி பழகி அவர்க ளிடத்தில் சுமுக உறவோடு இருந்து குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களிடத்தில் எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியில் மங்களம் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ராமசாமி, சேக் தாவூத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பர்கூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் நன்றியுரை கூறினார், 

    ×