என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public auction of coconut copra"

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது நிலக்கடலை மற்றும் தேங்காய் கொப்பரை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 100 குவிண்டால் தேங்காய் கொப்பரை ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 188-க்கு விற்பனையானது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது நிலக்கடலை மற்றும் தேங்காய் கொப்பரை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 100 குவிண்டால் தேங்காய் கொப்பரை ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 188-க்கு விற்பனையானது. இதில் முதல் தர தேங்காய் கொப்பரை குவிண்டால் ஒன்று ரூ.8,348 முதல் ரூ.8,900 வரை விலை போனது. இதே போல் 2-ம் தர தேங்காய் கொப்பரை குவிண்டால் ஒன்று ரூ.5,055 முதல் ரூ.8,010 வரை விற்பனையானது. தொடர்ந்து இம்மையத்தில் பொது ஏலத்தில் சுற்றுப்புற விவசாயிகள் எந்த கட்டணமும் இன்றி தங்கள் விலை பொருள்களை விற்பனை செய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×