search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prohibition to Sell"

    • தனியாா் விதை விற்பனையாளா்கள் விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும்.
    • தஞ்சாவூா் விதை பரிசோதனை ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் அம்மாபேட்டை, சாலியமங்கலம், ஆலக்குடி, பூதலூா், தஞ்சாவூா், திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளின் அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கோவிந்தராசு தலைமையில் தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் விநாயகமூா்த்தி, விதை ஆய்வாளா்கள் மோகன்தாஸ், பிரகாஷ், நவீன் சேவியா், சத்யா, சுரேஷ் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

    இதில் தனியாா் விதை விற்பனையாளா்கள் விதை விற்றதள்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்றும், ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச் சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வழங்கினா்.

    ஆய்வின்போது 16 விதை மாதிரிகள் முளைப்பு திறன் சேகரிக்கப்பட்டு தஞ்சாவூா் விதை பரிசோதனை ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும், விதை சட்ட விதிகளை மீறியதாக 6 விதை குவியல்களில் ரூ. 2.29 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரத்து 610 கிலோ விதைகளை விற்கத் தடை விதிக்கப்பட்டது.

    ×