என் மலர்
நீங்கள் தேடியது "Program at Children's Centre"
- சத்து மாத்திரைகள் குறித்து விளக்கினார்.
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஊட்டி,
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாபில், கூடலூர் அருகே தர்மகிரி குழந்தைகள் மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளர் ஆசியா அனைவரையும் வரவேற்றார். கூடலூர் போஷன் அபியான் வட்டார திட்ட உதவியாளர் பாரதிராஜா தலைமை தாங்கி, ஊட்டச்சத்து, கர்ப்பகால உணவுமுறை, தாய்ப்பால், குடற்புழு நீக்கம், உயிர்சத்து-ஏ திரவம், வயிற்றுபோக்கு, சத்து மாத்திரைகள் குறித்து விளக்கினார். முடிவில் சளிவயல் அங்கன்வாடி பணியாளர் ராஜம்மா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.






