search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private bus stuck in pothole"

    • மழையின் காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • 3 வருடங்களாக பாலம் வேலை நடைபெறுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேட்டுப்பா ளையம் சாலையில் ஜி.என்.மில்ஸ் அருகே கடந்த 3 வருடங்களாக பாலம் வேலை நடைபெறுவதால் அருகிலுள்ள சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இரவில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.

    வெள்ளக்கிணர் பிரிவு அருகே கோவையில் இருந்து வந்த தனியார் பஸ் நேற்று மாலை குழியில் சிக்கிக்கொண்டது. பொதுமக்கள் மற்றும் பலர் அதனை ஒருமணி நேரம் போராட்டி வெளியே கொண்டு வந்தனர். இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறும்போது, பாலம் வேலைகள் நடைபெறுவதால் சர்வீஸ் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது.

    அதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் வேலை ஆரம்பித்த காலத்தில் இருந்தே போடவில்லை. அதிலேயே வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பலத்த மழையின் காரணமாக மேலும் அந்த சாலைகள் பழுதடைந்துள்ளது.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சாலையில் அத்திகடவு குடிநீர் விரிவு படுத்துவதற்கும், கேஸ் பைப் அமைக்க தொண்டப்பட்ட குழிகளும் மூடப்படுவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நேரில் பார்வையிட்டு சாலையை செப்பினிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வரும் பால வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    ×