என் மலர்

  நீங்கள் தேடியது "Prime Minister M. K. Stalin laid the foundation stone"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
  • சத்துணவை சாப்பிட்டு பார்த்து கலெக்டர் ஆய்வு

  செங்கம்:

  செங்கம் ஊராட்சி ஒன்றியம் மேல்பென்னாத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேயர் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

  இதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் கலெக்டர் பா.முருகேஷ் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயராணிகுமார், செங்கம் தாசில்தார் முனுசாமி உட்பட அரசு துறை அலுவலர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  இதனை தொடர்ந்து மேல்பென்னாத்தூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

  மேலும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சமைத்து வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

  ×