search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prey"

    • கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லணை கால்வாயில் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விட்டனர்.
    • மூன்று பேர் கொள்ளிட ஆற்றில் நடுவில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருவைகாவூர் ஊராட்சி மணல்மேடு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (வயது 55) வடக்கு தெருவில் வசிக்கும் ரவிச்சந்திரன் (வயது 55) ஆகிய இருவரும் திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் வழக்கம் போல் ஆடுமேய்க்க ஆடுகளை ஓட்டி சென்றனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லணை கால்வாயில் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விட்டனர். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிட ஆற்றின் இரு கரையும் தொட்டு தண்ணீர் சென்றது. இதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் இருவரை கரையில் இருந்தவர்கள் பார்த்தவுடன் பாபநாசம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து விசைப்படகுகள் மூலம் ஆடு மேய்த்த தொழிலாளிகளை பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த சுமார் 50 ஆடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. இதுபோல், திருவைகாவூர் அடுத்த புதுக்கண்டி படுகை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சேட்டு அவரது மகன் அருண் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேர் கொள்ளிட ஆற்றில் நடுவில் திட்டுப் பகுதியில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் படி அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணிகளை கும்பகோணம் கோட்டா–ட்சியர் லதா பாபநாசம் தாசில்தா'ர் மதுசூதனன் வருவாய் ஆய்வாளர் சுகுணா கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ், சிவப்பிரகாசம் ஒன்றிய கவுன்சிலர் விஜயன் ஊராட்சி மன்ற தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறையினர் விரைந்து வந்து கொள்ளிட ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×