search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prevention of Torture Act"

    கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் தீபாவளி பண்டிகையின் போது விலங்குகளுக்கு தீக்காயம் ஏற்படுவது குறைந்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையின் போது விலங்குகளை துன்புறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது போன்ற காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

    விலங்குகளின் வாலில் பட்டாசு கட்டி வெடிக்க வைத்தாலோ, பட்டாசுகளை கொளுத்தி விலங்குகள் மீது வீசினாலோ ஜெயில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டம் விலங்குகளுக்கு தேவையற்ற வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்துவதை தடை செய்கிறது. விலங்குகளை துன்புறுத்தினால் அவர்கள் மீது கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்ட அளவில் விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தின் தலைவராக இருக்கும் கலெக்டர்கள், மண்டல கால்நடை பராமரிப்பு இயக்குனர்கள், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள், மாவட்ட கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் தீபாவளி பண்டிகையின் போது விலங்குகளுக்கு தீக்காயம் ஏற்படுவது குறைந்துள்ளது. பட்டாசு சத்தம் விலங்குகளை பயமுறுத்தும்.

    விலங்குகள் மீது பட்டாசு வெடித்தால் ஜெயில் தண்டனை

    மனிதர்களை விட விலங்குகளுக்கு செவிதிறன் கூர்மையானது. அதிக டெசிபல் பட்டாசு வெடிக்கும்போது அதன் சத்தம் கேட்டு விலங்குகள் பீதி அடைந்து ஓடும்போது வாகனங்களில் அடிபடுகின்றன. இதனால் தீபாவளி பண்டிகையின்போது சாலை விபத்துகளில் விலங்குகள் அதிகம் காயம் அடைகின்றன. எனவே பொதுமக்கள் விலங்குகளிடம் மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதையும் படியுங்கள்,,,சென்னையில் சாலைகளில் உள்ள குழிகளை மூட 1000 ஊழியர்கள் நியமனம் - மாநகராட்சி நடவடிக்கை 

    ×