என் மலர்

  நீங்கள் தேடியது "Pramod Sawan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முன்னர் உரிமை கோரிய நிலையில் புதிய முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. #GoanewCM #Goafloortest #PramodSawan
  பனாஜி:

  கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

  கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

  இந்நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த் இன்று காலை தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்.

  முன்னாள் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்காக அரசின் சார்பில் 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் நிலையில் எனக்கு வாழ்த்து கூறவும், மலர் மாலைகளுடன் வரவேற்பு அளிக்கவும் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #GoanewCM #Goafloortest  #PramodSawan
  ×