search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "posco law சிறுமிக்கு பாலியல் தொந்தரவு"

    ஆரணி அருகே டியூசனுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். சிறுமி தனது எதிர் வீட்டில் உள்ள உறவினர் மகேந்திரன் (வயது 27). என்பவரிடம் டியூசன்சென்று வந்தார்.

    நேற்று வழக்கம் போல் சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது மகேந்திரன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாயிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.

    அதிர்ச்சியடைந்த அவரது தாய் உறவினர்களுடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் மகேந்திரனிடம் விசாரணை நடத்தி அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ×