என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal invitation"

    • சித்திரை விழாவுக்கு வழங்கிய அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றிருந்த நிலையில், தற்போது தமிழக ஆளுநர் என்று உள்ளது.
    • ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த பொங்கல் விழா கொண்டாட்ட அழைப்பிதழை எம்.பி சு.வெங்கடேசன் பகிர்ந்திருந்தார்.

    ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் வரும் 12ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதைமுன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

    ஏற்கனவே சித்திரை விழாவுக்கு வழங்கிய அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றிருந்த நிலையில், தற்போது தமிழக ஆளுநர் என்று உள்ளது.

    அதாவது, அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த பொங்கல் விழா கொண்டாட்ட அழைப்பிதழை எம்.பி சு.வெங்கடேசன் பகிர்ந்திருந்தார். அதனுடன் அவர், " சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ×