search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollachi assualt case"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #PollachiAssaultCase
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதான பார் நாகராஜ் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர்.

    மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். #PollachiAssaultCase
    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பேசி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் கேட்டுக்கொண்டுள்ளார். #PollachiAssaultCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் செந்தில், ஆச்சிப்பட்டி வசந்த குமார், நாகராஜ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் சகோதரர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது நாங்கள்தான். சுயநலத்திற்காக வழக்கு தொடரவில்லை. எனது தங்கை பாதிக்கப்பட்டதுபோன்று வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் வழக்குதொடர்ந்தோம்.

    வழக்கின் ஆதாரமான வீடியோவை போலீசில் ஒப்படைத்தோம். பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து 3 பேரை கைது செய்தனர்.

    ஆளுங்கட்சியினர் எங்களுக்கு உதவியாக உள்ளனர். ஒரு சில அரசியல் வி‌ஷமிகள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஆளும்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த இணையத்தில் அவதூறு பரப்புகின்றனர்.

    இப்படி அவதூறு பரப்புபவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்கிறேன். உங்களிடம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அதை காவல்துறையிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்களுக்கு தோன்றுவதையோ, ஆளுங்கட்சியினர் மீது எவ்வளவு கெட்டபெயர் ஏற்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு இணையத்தில் தவறான பதிவுகளை போடாதீர்கள். உங்களால் முடிந்தால் அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கித்தர போராடுங்கள். அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.

    இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார். #PollachiAssaultCase

    பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய மாணவிகள் மற்றும் பெண்கள் குறித்த வீடியோ காட்சிகளை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #PollachiAssaultCase
    கோவை:

    சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு(27), என்ஜினீயர் சபரி ராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

    அந்த வீடியோவில், ஒரு இளம்பெண்ணை கும்பல் நிர்வாணப்படுத்துவதும், பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதும் போன்ற காட்சிகள் இருந்தன. கும்பலிடம் சிக்கிய அந்த இளம்பெண் ‘அண்ணா என்னை விட்டுருங்கண்ணா, உன்னை நம்பி தானே வந்தேன், ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என கதறுகிறார். இதேபோல எண்ணற்ற பெண்களை கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

    கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ அடிப்படையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதில் புகார் கொடுத்த மாணவியுடன், ஆனைமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள போலீசார், அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கும் அளிக்கின்றனர்.

    இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், கோவையை சேர்ந்த பல்கலை கழக பேராசிரியை என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைதானவர்களின் செல்போன்களில் இவர்கள் குறித்த வீடியோக்கள் இல்லை. அந்த வீடியோக்களை அழித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    தற்போது, அந்த செல்போன்களை ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். ‘ரெக்கவரி சாப்ட்வேர்’ மூலம் அந்த செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்பப் பெற்று, அதில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கும்பல் கடந்த 7 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைதான 4 பேரை தவிர வேறு யாருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இல்லை என போலீசார் மறுக்கின்றனர்.

    இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், பொது மக்கள் குற்றம் சாட்டினர். இவ்வழக்கில் கைதானவர்கள் மீது சாதாரண பிரிவுகளிலேயே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொள்ளாச்சியை சேர்ந்த வக்கீல்களும் குற்றம் சாட்டினர். #PollachiAssaultCase
    ×