என் மலர்

  செய்திகள்

  கைதான வசந்தகுமார், சபரிராஜன், சதீஷ்
  X
  கைதான வசந்தகுமார், சபரிராஜன், சதீஷ்

  பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்- பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் வீடியோ வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பேசி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் கேட்டுக்கொண்டுள்ளார். #PollachiAssaultCase
  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  இந்த வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் செந்தில், ஆச்சிப்பட்டி வசந்த குமார், நாகராஜ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

  இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் சகோதரர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

  திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது நாங்கள்தான். சுயநலத்திற்காக வழக்கு தொடரவில்லை. எனது தங்கை பாதிக்கப்பட்டதுபோன்று வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் வழக்குதொடர்ந்தோம்.

  வழக்கின் ஆதாரமான வீடியோவை போலீசில் ஒப்படைத்தோம். பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து 3 பேரை கைது செய்தனர்.

  ஆளுங்கட்சியினர் எங்களுக்கு உதவியாக உள்ளனர். ஒரு சில அரசியல் வி‌ஷமிகள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஆளும்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த இணையத்தில் அவதூறு பரப்புகின்றனர்.

  இப்படி அவதூறு பரப்புபவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்கிறேன். உங்களிடம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அதை காவல்துறையிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்களுக்கு தோன்றுவதையோ, ஆளுங்கட்சியினர் மீது எவ்வளவு கெட்டபெயர் ஏற்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு இணையத்தில் தவறான பதிவுகளை போடாதீர்கள். உங்களால் முடிந்தால் அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கித்தர போராடுங்கள். அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.

  இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார். #PollachiAssaultCase

  Next Story
  ×