search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police security duty"

    • பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட்டுகள், மருத்துவமனை, முக்கிய கோவில்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • உவரி கடற்கரையில் கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர குழுமத்தினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை

    நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் 1,000 போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நகரின் முக்கிய பகுதிகளில் வாகனசோதனையும் நடத்தப்படுகிறது.

    சந்திப்பு ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், டவுன், பாளை மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட்டுகள், மருத்துவமனை, முக்கிய கோவில்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தீவிர சோதனை

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சப் -இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரைட், சோமசேகரன் மற்றும் போலீசார் தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் அனைத்து உடமைகள் மற்றும் பார்சல்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படு கிறது.

    ரெயில்வே போலீ சாருடன் ஆயுதப்படை, மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திசையன்விளை அருகே உவரி கடற்கரையில் கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர குழுமத்தினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கூடுதல் பாதுகாப்பு

    இதேபோல மாவட்ட எல்லைகளில் அனைத்து வாகனங்களும் தீவிர மாக பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, மானூர், அம்பை, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, ராதாபுரம், பணகுடி, களக்காடு, ஏர்வாடி உள்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கூடன்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிப்பாட்டு தளங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்கிளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

    ×